Sunday, March 20, 2011

தோஷம் போக்கும் பிரதோஷம்


இரவும் பகலும் சந்திக்கின்ற நேரத்திற்கு `உஷத் காலம்’ என்று பெயர். உஷத் காலத்தை பகற்பொழுதின் முகம் என்று சொல்வார்கள். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவியாகிய உஷா. அவளது பெயரிலேயே இது உஷத்காலம் என அழைக்கப்படுகிறது.
இதற்கு நேர் எதிராக பகலும் இரவும் சந்திக்கும் நேரம் `பிரத்யுஷத் காலம்’ எனப்படும். சூரியனின் இன்னொரு மனைவியாகிய பிரத்யுஷா இக்காலத்திற்கு அதிதேவதை என்பதால் அவள் பெயரால் இது அழைக்கப்பட்டு, இப்போது பேச்சு வழக்கில் “பிரதோஷ காலம்” என அழைக்கப்படுகிறது என்பார்கள்.
பிரதோஷ வேளையை “ரஜ்னிமுகவேளை” எனவும் கூறுவர். இதற்கு `இரவின் முகம்’ என்பது பொருள்.
இந்த பொழுது சாயும் நேரத்திற்கு அதிதேவதையான பிரத்யுஷாவிற்கு `சாயா’ என்ற பெயரும் உண்டு. இந்த வேளையில் பகல் முழுவதும் உழைத்துக் களைத்த உயிர்கள் அவளால் ரட்சிக்கப்படுகிற காலம் என்ற பொருள்பட இந்த நேரம் `சாயரட்சை’ எனவும் அழைக்கப்படுகிறது.
தோஷம் என்றால் குற்றமுடையது என்பது பொருள்; அதேநேரம், பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள்.
எனவே குற்றமற்ற இந்த பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment