Tuesday, March 23, 2010

கிரி வலம்...

இன்று அனைவருக்கும் தெரிந்த ஆன்மிக வார்த்தை கிரி வலம் . அதிலும் திருவண்ணாமலை கிரிவலம் வருதல் நாம் அனைவரும் அறிந்த ஒன்று . ஆனால் இந்த கிரி வலம் வருதல் சில பல வருடங்களுக்கு முன் பழனி மலையில் தான் மிகவும் புகழ் பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக அதிகாலை சுமார் ஐந்து மணிஅளவில் பழனி மலையை கிரி சுற்றி வருவார்கள்.
சில கிலோ மீட்டர்கள் பழனி மலையை கிரி சுற்றி வேர்க்க வேர்க்க வருபவர்களை பரவலாக பார்க்க முடியும். ஆனால் அதில் பொதிந்துள்ள பொருள் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு.
சித்தர் போகரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகர் விக்ரகம் இருக்கும் பழனி மலை முழுவதும் நோய் தீர்க்கும் பல மூலிகைகள் பரவலாக இருக்கிறது. அதிகாலை நேரத்தில் அந்த மூலிகைகள் தனது மருத்துவ குணங்களை முழுமையாக வெளிப் படுத்தும். காற்றில் சுகந்தமாக பரவும் அந்த மூலிகைகளின் நறுமணத்தை நுகர்ந்தாலே வியாதிகள் எல்லாம் விடை பெற்று ஓடி விடும் .அத்துடன் சில கிலோ மீட்டர்கள் நடந்து கிரி எனப்படும் மலையை சுற்றி வரும் பொது உடலில் உள்ள அசுத்தங்களும் வெளியேறி விடும் . இப்படி ஒரே நேரத்தில் ஆன்மிகமும், உடல் நலத்தையும் ஒருங்கே வளர்த்தது தான் நம் முன்னோர்கள் நமக்கு காட்டிய பாதை .

No comments:

Post a Comment