Wednesday, March 10, 2010

முன்னோர் சொல் வேதம்..

நம் முன்னோர்கள் அளவான ஆசையுடன் நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் . இன்றும் கிராமப் பகுதிகளில் நீங்கள் பார்க்கலாம் ..பல கோடிகளுக்கு சொந்தக்காரர்களான மக்கள் மிகவும் எளிமையாக சாதாரணமாக இருப்பதை..

வழிபாடு, பண்பாடு, வாழ்க்கை முறை, திருமணம் என்று எல்லா தருனங்களுக்குமே ஏற்றதொரு நெறிமுறைகளை கற்றுத் தந்து விட்டுச் சென்றுள்ளனர் நம் முன்னோர்கள் . நாம் அதைத் திருத்த வேண்டியதில்லை ..முழுமையாக ஏற்றுக் கொண்டாலே போதும் ..நிறைவான வாழ்க்கையுடன் நிம்மதியையும் அடையலாம்.

நம் முன்னோர்களின் பாதை எப்படி நமக்கு வாழ்வியல் பாடங்களை கற்றுத் தருகிறது என்பதை இணி விரிவாக காண்போம்.

1.ஆன்மிகமும் முன்னோர்களும்..

வேலை பரபரப்பிலும், வாழ்க்கை வேகத்திலும் ஆன்மிகம் என்பதே இன்று நமக்கு அந்நியமான ஒன்றாகி விட்டது. கோவிலுக்குப் போவது என்பது கேளிக்கையான ஒரு நிகழ்வாகி விட்டது. ஆனால் பிரம்மாண்டமான கோவில்களையும் ,மிகப் பெரும் ஆன்மிக விழாக்களையும் நடத்தி கடவுள்களைப் போற்றிப் பாடியும், வணங்கியும் மகிழ்ந்தவர்கலல்லவா நம் முன்னோர்கள். இறைப் பணியே இன்பம் என்று தங்கள் செல்வங்கள் அனைத்தையும் இறைவனுக்கே சமர்ப்பணம் என்று இறை பணியில் இன்பம் தேடியவர்கள் அல்லவா நம் முன்னோர்கள்.

ஆலயங்களுக்கு செல்வது என்பது ஆண்டவனை மட்டும் தரிசிக்க என்று எண்ணியவர்கள் அல்லர் நம் முன்னோர்கள் ..மாறாக வாழ்க்கையின் மற்றொரு பரிணாமத்தை ஆலயங்களில் கற்றுத் தெளிந்தவர்கள் அவர்கள்.

அன்றைக்கு ஆலயங்களின் உட் பிரகாரங்கள் பெரும்பாலும் கற் சுவர்களாகவே அமைக்கப் பட்டிருக்கும். தீபங்களின் அற்புத ஒளியில் ஆண்டவன் தரிசனம் .பெரும்பாலும் ஆண்கள் மேலுக்கு ஒரு துண்டைப் போர்த்தி ஆண்டவனை வணங்குவது இயல்பு.கருங்கற்களால் அமைக்கப் பட்ட ஆலயங்களையும் , துண்டைப் போர்த்தி ஆடவர் ஆலயத்தில் நுழைவதை திருச்செந்தூர் போன்ற ஆலயங்களிலும் இன்றும் காணலாம்.

இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?

பார்ப்போம் விரிவாக ....

No comments:

Post a Comment