Tuesday, March 9, 2010

முன்னோர் சொல் வேதம். .


முன்னோருக்கு முதல் வணக்கம்...

அன்பு நெஞ்சங்களே
காலத்தையும் ,நேரத்தையும் பகுத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இன்றைக்கு மனிதன் தன் வேலைப் பளுவிலும், பொருளாதார சிக்கலிலும் ஆட்பட்டுள்ளதாக நினைக்கிறான் .

நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நினைக்கிறான்.


பொருளாதாரத்தில் ஒரு பதம் குறிப்பிடுவார்கள். "மனிதத் தேவைகள் அளவிட முடியாதவை" என்று. முற்றிலும் பொருள் பொதிந்த விளக்கம் அது.

இன்று மட்டுமல்ல, மனிதன் என்றைக்கு சிந்திக்கவும், சம்பாதிக்கவும் முயன்றானோ அன்று முதலே குடும்ப,பொருளாதார பிரச்சனைகள் தொடங்கிவிட்டன எனலாம்.

ஆனால் முன் எப்போதையும் விட இன்றைக்கு மனிதன்

நிம்மதி இழந்து , கவலைகளின் மறு உருவமாகவே நடமாடிக் கொண்டிருக்கிறான். மாத வருமானம் லட்சங்களில் இருந்தாலும், அணி வகுத்து ஆடம்பரப் பொருள்கள் இருந்தாலும் எதிலும் பற்று அற்று ஒரு நடமாடும் பிம்பமாகத்தான் காட்சி அளிக்கிறார்கள் இன்றைக்குப் பல மனிதர்கள்.

எதனால் இந்த நிலை?

யாரால் இந்த நிலை?

எதற்காக இந்த நிலை?

கேள்விகள் அனைத்திற்கும் ஒரே விடைதான்..

மனிதனால்..மனிதர்களுக்காக.. என்பது தான் அந்த விடை.

எண்ணிப் பாருங்கள். இன்றைக்கு நமக்கு முன் வாழ்ந்த நம் தலைமுறையை.. நம்மை விட குறைவான நாகரிகம்(?), நம்மை விட குறைவான கல்வி, நம்மை விட குறைவான பொருளாதாரம் .. இப்படித் தான் இருந்தது நம் முன்னோர்கள் காலம்.

ஆனால் அவர்கள் வாழ்க்கை ..ஒரு நிறைவான..முழுமையான வாழ்க்கை அது..

கவிஞர் ஒருவர் பாடியதைப் போன்று "வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடா" என்ற வரிகளை நினைவில் வைத்து முன்னோர்கள் பாதையை முன் வைத்து சென்றவர்கள் என்றைக்குமே முன்னேற்றப் பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறார்கள் ..

நம் வாழ்விலும், நலத்திலும் நம் முன்னோர்களை விட

அன்பும், அக்கறையும் கொண்டுள்ளவர்கள் யாராக இருக்க முடியும் என்று ஒரு நண்பர் கூறினார் . எவ்வளவு சத்தியமான வார்த்தை அது.

நம் பாட்டனுக்கும், பாட்டிக்கும் நம் மீது அக்கறை இல்லாமலா இருக்கும். ஆனால் நம்மில் எத்தனை பேர்

தெய்வமாகி விட்ட நம் முன்னோர்களை நித்தமும் நினைத்து வணங்குகிறோம் . வருடத்திற்கு ஒரு நாள்

சடங்கு போல ஒப்புக்கு சாமி கும்பிடுபவர்கள் எண்ணிக்கை அவரவர் மனசாட்சிக்கே தெரியும்.

அனைத்துமே, அனைவருமே தெரிந்தே செய்ய வாய்ப்பில்லை.

எனவேதான் தெரியாமலோ, தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமலோ இருப்பவர்களுக்கு உதவத்தான் இந்த முயற்சி.

நம் முன்னோர்கள் முற்றும் தெரிந்தவர்கள். நம்மை விட அனைத்தும் அறிந்தவர்கள். வாழ்வியலாக இருந்தாலும் சரி, மருத்துவமாக இருந்தாலும் சரி, பொருளாதாரமாக இருந்தாலும் சரி ..ஆன்மிகமாக இருந்தாலும் சரி ..அனைத்திலுமே அவர்கள் நம்மை விட பல படிகள் மேலானவர்கள் . எந்த நிலையிலும் முன்னோர்களை மனதில் நினைத்து அவர்கள் வாழ்வியல் அனுபவங்களாக விட்டுச் சென்றவைகளை பிடித்தாலே நம் வாழ்க்கை வளம் பெரும் ..

No comments:

Post a Comment